மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் அமைக்கப்பட்ட புதிய முருங்கன் பொலிஸ் நிலையம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனால் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

தற்காலிகமாக இயங்கி வந்த முருங்கன் பொலிஸ் நிலையத்திற்கான நிரந்தர கட்டடமானது 5 ஏக்கர் நிலப்பரப்பில் பொலிஸ் திணைக்களத்தின் 4.5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு நேற்றைய தினம் வைபவ ரீதியாகத் திறந்து உரிய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்விற்குப் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கலந்து கொண்டதுடன் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி விஜய குணவர்த்தன , வன்னி பிராந்திய பொலிஸ்மா அதிபர் அனுர அபய விக்ரம, மற்றும் மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க, உட்பட மன்னார் மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப் பதிகாரிகள் மற்றும் பொலிஸ் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here