மாஸ்டர் பட உரிமை 7 ஸ்கிரீன் நிறுவனம் வசம்.

விஜய்யின் 64-வது படமாக உருவாகிவரும் இந்தப் படத்துக்கு மாஸ்டர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

டெல்லி, கர்நாடகா ஆகிய இடங்களில் நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

விரைவில் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்க இருக்கின்றன.

வரும் ஏப்ரல் மாதத்தில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு மாஸ்டர் படத்தைத் திரைக்குக் கொண்டு வர படக்குழு முடிவு செய்திருக்கிறது.

செவன் ஸ்கிரீன் நிறுவனம் மாஸ்டர் படத்தை வெளியிடும் உரிமையை கைப்பற்றியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here