இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கேரக்டரில் மாதவன் நடிக்கும் ‘ராக்கெட்டரி’ என்ற படம் சமீபத்தில் தொடங்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் என்பவர் இந்த படத்தில் மாதவன் நடிக்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.madhavan க்கான பட முடிவு

பூ, களவாணி ஆகிய படங்களுக்கு இசையமைத்தும், கேரள நாட்டிளம் பெண்களுடனே, தேநீர் விடுதி ஆகிய படங்களை இயக்கியும் உள்ள எஸ்.எஸ்.குமரன்,

விஞ்ஞானி நம்பி நாராயணன் கதையை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே தொலைக்காட்சி தொடராக தயாரித்ததாகவும் ஆனால் ஒருசில காரணங்களால் அந்த தொடர் தொலைக்காட்சியில் வெளியாகவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த கதையின் உரிமையை வைத்திருக்கும் தன்னுடைய அனுமதி இல்லாமல் நம்பி நாராயணன் வாழ்க்கையை படமாக்க கூடாது என்றும்,

மாதவன் இந்த படத்தில் நடிக்க கூடாது என்றும் எச்சரித்துள்ள எஸ்.எஸ்.குமரன்,

மீறி அவர் நடித்தால் அவர் மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் இந்த எச்சரிக்கையை கண்டுகொள்ளாமல் ‘ராக்கெட்டரி’ படக்குழுவினர் படத்தின் பணியை விறுவிறுப்பாக செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here