ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 லீக் தொடர் வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது.

நடப்பு சாம்பியன் அணியான மெல்போர்ன் ரெனேகட்ஸ் பாகிஸ்தானைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் உஸ்மான் ஷின்வாரி, ஆல்-ரவுண்டர் பஹீம் அஷ்ரஃப் ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளது.

ஷின்வாரி தொடரின் முதல் ஏழு ஆட்டங்களில் விளையாடுவார். அதன்பின் இங்கிலாந்தைச் சேர்ந்த ஹேரி கர்னி அவருக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்படுவார்.

உஸ்மான் ஷின்வாரி ஏற்கனவே கடந்த முறை மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.

7 போட்டிகளில் 8 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். ஓவருக்கு சராசரியாக 6.14 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார்.

முதல் 8 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி விளையாடுவார். பின்னர் அவருக்குப் பதிலாக பஹீம் அஷ்ரப் விளையாடுவார்.

பஹீம் அஷ்ரஃப் பாகிஸ்தான் சூப்பர் லீக் 2019 சீசனில் 12 இன்னிங்சில் 21 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here