பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.2.28 கோடியாகும்.

அதில் அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.1 கோடியே 28 லட்சத்து 50 ஆயிரத்து 498. அவரிடம் கையிருப்பு தொகையாக ரூ.48,944 உள்ளது.தொடர்புடைய படம்
பிரதமர் நரேந்திர மோடி 2017-18-ம் ஆண்டுக்கான வருமானவரி தாக்கல் செய்துள்ளார். அதில் அவரது சொத்து விவரங்கள் மற்றும் கையிருப்பு தொகை குறிப்பிடப்பட்டுள்ளது.

மோடியின் சொத்து மதிப்பு ரூ.2.28 கோடியாகும். அதில் அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.1 கோடியே 28 லட்சத்து 50 ஆயிரத்து 498.

குஜராத் மாநிலம் காந்தி நகரில் மோடிக்கு சொந்தமான ஒரு வீடு உள்ளது. அதன் மதிப்பு ரூ.1 கோடி. காந்திநகர் பாரத ஸ்டேட் வங்கி என்.எஸ்.சி.எச். கிளையில் ரூ.11 லட்சத்து 29 ஆயிரத்து 690 இருப்பு தொகை உள்ளது.

மோடியின் பெயரில் கார் எதுவும் இல்லை.
மேலும் சமீபத்தில் அவர் மோட்டார் வாகனம், விமானம், கப்பல், உல்லாச படகு போன்ற எதுவும் வாங்கவில்லை. வங்கிகளில் அவர் கடன் எதுவும் பெறவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here