இன்று நல்லூர் கோவில் பின் வீதியில் தியாக தீபம் திலீபனை நினைவு கூர்வதற்க்காக

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் mp செல்வராசா கையேந்திரன் உட்பட உறுப்பினர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அவர்கள் தீபம் ஏற்ற முற்பட்டபோது இலங்கை காவல்துறையினர் ஒழுக்கம் இல்லாமல் நடந்துகொண்டனர்.

தீபத்தை சப்பாத்துகால்களால் மிதித்து தமது ஒழுக்கமில்லாத ஆதிக்கதிமிரை வெளிப்படுத்திஉள்ளனர்.

இந்த செயல் தாயகத்தில் உள்ளமக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது.

இது உலகதமிழர்கள் மத்தியில் கடும் கொதிப்பை ஏற்படுத்திஉள்ளது.

ஐநாவில் ஒருமுகத்தையும் இலங்கையில் வேறு ஒரு முகத்தையும் அரசஅதிபர் கோத்தபாய காட்டுகிறார்.

புலத்தில் உள்ள தமிழ் அமைப்புகளுடன் இலங்கைக்குள் தீர்வுகாண வாருங்கள் என பேச்சுக்கு அழைப்பு விடுத்தது சில மணித்தியாலத்தில் தனது ஆதிக்க முகத்தை காட்டுகின்றது அரசு.

தமிழர்கள் தமது உறவினர்களுக்கும், மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் தமது உயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செய்வதை தடுக்க நினைக்கும் இவர்களா? உங்களுக்கு தீர்வு தரப்போறார்கள்.

தமிழ் பிள்ளைகளை அச்சுறுத்திய அவர்களை ஒடுக்கும் திட்டமும் உள்ளது.

MP கையேந்திரனின் கைதின் பின்னணியில் அரசு ஆதரவு தமிழ் கட்சிகளுக்கும், குழுக்களும் போலீஸ்சுக்கு பின்புலத்தில் உள்ளனர் என்பது இந்தபிரச்சனை எடுத்துக்காட்டுகிறது.

இதன் மூலம் சிலர் தமது பலத்தை கண்டிருக்கலாம்.

கரணம் இதுவரை காலமும் நினைவேந்தல் செய்துவரும் mp கையேந்திரன் கைது செய்யப்படவில்லை.

மாறாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

அதேபோன்று போலீஸ் இதையும் அவர்கள் வரும்போது தடுத்து நிறுத்தி இருக்கலாம்.

யாரோ போலீஸ்கார்களுக்கு சொல்லி கொடுத்தது போல் எல்லாம் நடந்து முடிந்துள்ளது.

இது காலம் காலமாக நடப்பவை அதிர்ச்சி அடைவதற்கு ஒன்றும் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here