முஷரப்புக்கு தூக்கு தண்டனை விதித்த கோர்ட்டு.!

2016-ம் ஆண்டு சிகிச்சைக்காக துபாய் சென்ற முஷரப் பின்னர் பாகிஸ்தானுக்கு திரும்பவில்லை.

விநோத நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர் துபாயில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

முஷரப் மீதான தேசத் துரோக வழக்கை விசாரிக்க இஸ்லாமாபாத்தில் சிறப்பு கோர்ட்டு அமைக்கப்பட்டது.

இவ்வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு 6 ஆண்டுகளாக விசாரித்து வந்தது. கடந்த 17-ந் தேதி முஷரப்புக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

மரண தண்டனைக்கு எதிராக லாகூர் ஐகோர்ட்டில் முஷரப்பின் வழக்கறிஞர் அஸார் சித்திக்கி இன்று வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில் பாகிஸ்தான் அரசு மற்றும் அரசு அதிகாரிகள் எதிர் மனுதாரர்களாக இணைக்கப்பட்டுள்ளனர்.

முஷரப்பின் வழக்கறிஞர் தாக்கல் செய்த 86 பக்கங்களை கொண்ட மனுவில்

திர்ப்பில் முரண்பாடுகளும் எதிர்மறையான கருத்துகளும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரகதியில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டதாகவும்,

தேசநலனுக்கு எதிரான எந்த காரியத்திலும் முஷரப் ஈடுபட்டதற்கான ஆதாரங்களோ,

கோர்ட்டில் நிரூபிக்கப்படாத நிலையில் அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here