தண்டனை அனுபவித்து வரும் நளினி வழக்கில் இருந்து விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இன்று (சனிக்கிழமை) 8ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுள்ள நளினியிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் அடைக்கப்பட்டிருந்த அறையில் பொலிஸார் சோதனை நடத்தினர்.

குறித்த சோதனை நடவடிக்கையில் முருகனின் அறையில் இருந்து ஒரு ஆண்ட்ராய்டு தொலைப்பேசி, 2 சிம்கார்டு, ஹெட்செட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தை தொடர்ந்து முருகனும், அவரது மனைவி நளினியும் சந்திக்க தடை விதிக்கப்பட்டது. மேலும் முருகனுக்கு ஜெயிலில் வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டு, தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனை கண்டித்து முருகன் சாப்பிட மறுத்து உண்ணாவிரதம் இருக்கிறார். அத்துடன் சிறையில் உள்ள முருகனை சிறை நிர்வாகம் கொடுமைப்படுத்துவதாகவும் அவர் கூறிவருகிறார்.

இதனை கண்டிக்கும் வகையிலும், விடுதலையை வலியுறுத்தியும் முருகனின் மனைவியான நளினியும் கடந்த 26ஆம் திகதி முதல் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here