தியாகதீபம் திலீபனின் 31 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று நல்லூரில் எழுச்சிபூர்வமாக இடம்பெற்றது. திலீபன் வீரகாவியமான, காலை 10.48 மணியளவில் – அவர் சாவடைந்த இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டதை அடுத்து நிகழ்வுகள் ஆரம்பமாகின.

அதையடுத்து நல்லுர் பின் வீதியில் அமைந்துள்ள திலீபன் நினைவிடத்தில்,பொதுச்சுடர், ஈகச்சுடர் என்பன ஏற்றப்பட்டு, திலீபன் உருவப்படத்துக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டன. இதையடுத்து, நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.

இன்றைய நினைவேந்தல் நிகழ்வின் போது இருவர் தூக்குக் காவடி எடுத்து வந்திருந்தனர்.

இந்த நிகழ்வில் முன்னாள் போராளிகள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here