பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

அவரது மகள் மரியம் நவாசும் நிதிமோசடி வழக்கில் தேசிய பொறுப்புடமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நவாஸ் ஷெரீப்பின் மருமகனும், மரியம் நவாசின் கணவருமான முகமது சப்தாரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.

பாகிஸ்தான் ராணுவ தளபதி மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளை இழிவுபடுத்தும் விதமாக பேசிய வழக்கில் முகமது சப்தார் கைது செய்யப்பட்டதாக லாகூர் போலீசார் தெரிவித்தனர்.

ஊழல் வழக்கு விசாரணைக்காக கடந்த 13-ந்தேதி முகமது சப்தார் கோர்ட்டில் ஆஜரானபோது, ராணுவ தளபதி மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் குறித்து தரக்குறைவான கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் முகமது சப்தார் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here