தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாராக அறியப்படுபவர் நயன்தாரா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் மிக அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகையாக நயன் தான் உள்ளார்.

ரேடியோ ஒன்றிற்கு தற்போது அவர் பேட்டியளித்துள்ளார். அதில், தன் சினிமா கேரியரில் தான் செய்த மிகப்பெரிய தவறு பற்றி அவர் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

முருகதாஸின் கஜினி படத்தில் நடித்தது தான் தனது 15 வருட சினிமா வாழ்க்கையில் தான் செய்த மிகப்பெரிய தவறு’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முருகதாஸ் முதலில் தன்னிடம் கதையைச் சொன்னபோது சித்ரா என்கிற அந்த கேரக்டர், இன்னொரு கதாநாயகியான அசினுக்கு இணையானது எனக் கூறியதாகவும், ஆனால் படத்தில் தனது கேரக்டர் டம்மியாக்கப் பட்டு விட்டதாகவும் நயன் ஆதங்கப் பட்டுள்ளார்.

தனது காட்சிகளைப் பார்த்த போது தான் ஏமாற்றப்பட்டது புரிந்தது என்றும், அதற்குப்பிறகு தான் கதைகளை மிக கவனமாக கேட்க ஆரம்பித்துவிட்டதாகக் கூறியுள்ள நயன், தான் ஏமாந்த, மறக்க விரும்பும் ஒரே படம் கஜினி தான் எனக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here