நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இருவரும் பொற்கோவிலில் சிறப்பு சாமி தரிசனம் செய்திருக்கிறார்கள்.
நயன்தாராவும், விக்னே
ஷ் சிவனும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக வாழ்ந்து வருவது அ
னைவரும் அறிந்த செய்தி. இருவரும் லிவிங் டுகெதர் பாணியில் தனிக்குடித்தனம் நடத்
துவதாகவும் செய்தி பரவுகிறது. இருவரும் அதை மறுக்காத நிலையில் ஜோடியாக புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்கள்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பக்திமயமாக இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற ஒரு படத்தை வெளியிட்டனர். இருவரும் ஒரே வீட்டில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிவிட்டு அந்த படத்தை பகிர்ந்து இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தற்போது அமிர்தசரசில் உள்ள பொற் கோவிலில் இருவரும் சிறப்பு சாமி தரிசனம் செய்துள்ளனர். நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கோலமாவு கோகிலா’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய படங்கள் வெற்றி பெற்றதற்காகவும், விக்னேஷ் சிவனின் பிறந்த நாள் செப்டம்பர் 18ம் தேதி என்பதாலும், பொற் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.