தெற்காசிய போட்டியில் மாலத்தீவு – நேபாளம் அணிகள் டி20 கிரிக்கெட் போட்டியில் மோதின. முதலில் மாலத்தீவு அணி பேட்டிங் செய்தது.

அந்த அணி 10.1 ஓவரில் வெறும் 16 ரன்களே எடுத்து ஆல்அவுட் ஆனது மாலத்தீவ. நேபாள வீராங்கனை அஞ்சலி சந்த் 13 பந்துகளில் ரன்ஏதும் விட்டுக் கொடுக்காமல் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

இதில் கடைசி மூன்று விக்கெட்டையும் ஹாட்ரிக் விக்கெட்டாக வீழ்த்தினார். மாலத்தீவு அணி 10.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 16 ரன்களே எடுத்தது.

பின்னர் 17 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நேபாளம் ஐந்து பந்திலேயே இலக்கை எட்டியது.

டி20 கிரிக்கெட்டில் இந்திய வீரர் தீபக் சாஹர் 7 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்களை கைப்பற்றியதே சாதனையாக இருந்தது.

அதேபோல் வீராங்கனைகளில் சீனாவிற்கு எதிராக மலேசியாவைச் சேர்ந்த மாஸ் எலிசா 3 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here