கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியை சேர்ந்தவர் 55 வயதான நித்திய கீதபிரியாநந்தா, இணையம் மூலம் நித்தியைப்பற்றி அறிந்துள்ளார்.
2005 ஆம் ஆண்டில் இருந்து நித்தியாந்தாவின் சிஷ்யை கீதபிரியா பணியாற்றி வந்துள்ளார்.
நித்தியானந்தா ஆசிரமத்தால் நடத்தப்படும் பல்வேறு இணையதள கட்டணப் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றுள்ளார்.
கீதபிரியா, கனடா அரசாங்கத்தில் நித்தியானந்தா மீது புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 லட்சம் வரை பணம் கட்டி ஆன்லைன் மூலமாக பயிற்சியை முடித்தபோது மேலும் பணம் கட்டுமாறு சொல்லப்பட்டுள்ளது.
நித்யானந்தா பீடம் புதிய மணி பேங்க் திட்டம் ஓன்றை துவங்கியுள்ளதாகவும்,
அதில் பணம் இரட்டிப்பாக்கித் தரப்படும் என்றும் நிர்வாகிகள் வாக்குறுதி கொடுத்துள்ளனர்.இதை நம்பிய கீதபிரியா 14 லட்சம் ரூபாய் வரை செலுத்தியுள்ளார்.
ஆனால் நித்யானந்தா மட நிர்வாகிகள் சொன்னபடி, மீண்டும் வங்கி கணக்கிற்கு பணம் வரவே இல்லை.
ஆசிரமத்தை தொடர்புகொண்டு கேட்டதிற்கும் தெளிவான விளக்கமும் கொடுக்கவில்லை என்று கீதபிரியா தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இதுவரை தான் நித்தியானந்தா ஆசிர நிர்வாகத்திடம் 90 லட்ச ரூபாய்க்கு மேல் இழந்துள்ளதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.