யாழ்ப்பாணம் அரியாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாக படையினரால் தெரிவிக்கப்பட்ட வீட்டுக்குள் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினரால் அறிவிக்கப்பட்ட நிலையில் வீட்டுக்குள் 8 இடங்களில் அகழ்வு செய்யப்பட்டு தேடுதல்கள் நடத்தப்பட்ட போதும் அங்கு எவையும் கிடைக்கவில்லை.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் அனுமதியுடன் இந்த அகழ்வுப் பணிகள் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டன. சம்பந்தப்பட்ட வீட்டின் அறைகளுக்குள் சந்தேகிக்கப்படும் 8 இடங்களில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

எனினும் அங்கு எவையும் இருக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்த நிலையில் அகழ்வுப் பணிகளைக் கைவிட்ட பொலிஸார் நேற்று மாலை 5.30 மணிக்கு அங்கிருந்து சென்றனர்.

தடயவியல் பொலிஸார் உள்ளிட்ட பெருமளவு பொலிஸார் இந்த அகழ்வு – தேடுதல் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here