என்னை யாரும் கடத்தவில்லை” நித்யானந்தா ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டதாக கூறும் பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
பெங்களூரை சேர்ந்தவர் ஜனார்த்தனா ஷர்மா. இவர் குஜராத் ஹைகோர்ட்டில் ஒரு மனுவினை தாக்கல் செய்தார். அதில், அவர் சொல்லி உள்ளதாவது:
“கடந்த 2013-ல் பெங்களூரிலுள்ள நித்தியானந்தாவுக்குச் சொந்தமான கல்வி நிறுவனத்தில் 7 முதல் 15 வயதுடைய மகள்களைச் சேர்த்தோம்.
ஆனால், அவர்கள் பெங்களூரிலிருந்து அகமதாபாத் கிளைக்கு மாற்றப்பட்டு விட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.
அகமதாபாத் சென்றோம். ஆனால் அங்குள்ள ஆசிரம ஊழியர்கள் எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இதன் பிறகு போலீசுடன் சென்று ஒரு மகளை மீட்டோம்.
ஆனால் மூத்த மகள்கள் லோகமுத்ரா, மற்றும் நந்திதா, இரண்டு பேருமே வரமறுத்துவிட்டார்கள். அதனால் அவர்களை மீட்டுத்தருமாறு அந்த தம்பதி மனுவில் கூறியுள்ளார்
இந்நிலையில் ஜனார்த்தனா ஷர்மாவின் மூத்தமகள் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
மா நித்தியானந்தா என்ற பெயரில் பேஸ்புக்கில் அந்த வீடியோ வெளியாகி உள்ளது.
அதில், “எனக்கு 18 வயசாகுது.. என்னை யாரும் கடத்தவில்லை. நான் பத்திரமாக இருக்கேன்.
என் விருப்பப்படியேதான் இருக்கிறேன்.. எங்கு வேண்டுமானாலும் போறேன், வருகிறேன்.
ஆனால், நான் கடத்தப்பட்டதாகக் கூறி சொல்லி, எனக்கு மனஅழுத்தத்தை தருகிறார்கள்.
எனக்கு இங்கே நித்தியானந்தா ஆசிரமத்தில் எந்த தொந்தரவும் இல்லை, பெற்றோரை பார்க்கவும் எனக்கு விருப்பமில்லை” என்று தெரிவித்துள்ளார்.
மகள்கள் வேண்டும் என்று கோர்ட் வாசற்படியில் பெற்ற தந்தை ஏறி இறங்கிவரும் நிலையில், திடீர் திருப்பமாக இப்படி ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை தந்துவருகிறது.