பாலியல் புகார்கள் எடுபடாது- நித்யானந்தா பேச்சு.

கடத்தல், பாலியல் வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வரும் நித்யானந்தா தலைமறைவாக உள்ளார்.

அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். ஈக்வடார் அருகே கைலாசா என்ற பெயரில் தனி நாட்டை உருவாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இன்டர்போல், சி.பி.ஐ. உதவியுடன் அவரை கைது செய்ய கர்நாடகா போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஆனாலும் இதுவரை அவரது இருப்பிடத்தை போலீசாரால் கண்டு பிடிக்க முடியவில்லை.

போலீஸ் தேடினாலும் நித்யானந்தா சமூகவலைதளங்களில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவர் புதிதாக வெளியிட்ட வீடியோவில் கூறி இருப்பதாவது:-

பாலியல் பலாத்கார வழக்கில் என்னை போலீசார் கைது செய்தபோது அதற்கான காரணத்தை கூறவில்லை. கைது செய்த பிறகே புகார் தருபவர்களை போலீசார் தேடினர்.

2002-ம் ஆண்டு முதல் எனது வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்வும் வீடியோ பதிவாக உள்ளது. எனவே என் மீதான பாலியல் புகார்கள் எடுபடாமல் போய்விடும்.

என் மீது புகார் கொடுப்பவர்கள் 2002-க்கு முன்பு நிகழ்ந்த குற்றம் என புகார் கொடுங்கள்.

நான் பல வி‌ஷயங்களில் ஜெயித்த போராளி. நெத்தியடி என்பது போல் நித்தியடி என்ற ‘டிரண்டு’ உருவாகி உள்ளது. எனது சீடர்கள் நித்தியடி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு நித்யானந்தா வீடியோவில் பேசி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here