அதன்படி இன்று வழமைபோல் வடக்கிற்கான ரயில்சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த யாழ்தேவி புகையிரதம் பிற்பகல் மூன்று மணியளவில் கல்கமுவ- அம்பன்பொல பகுதியில் வைத்து தரம்புரண்டு விபத்துக்குள்ளானது.
விபத்தின் போது யாழ்.தேவி புகையிரதத்தின் ஐந்து பெட்டிகள் புகையிரத பாதையிலிருந்து விலகிச் சென்றுள்ளன. இதேவேளை புகையிரதத்தின் இயந்திரப் பகுதி புகையிரத கடவையில் இறுகியிருந்தது.
இந்த விபத்தில் பயணிகள் ஒருவருக்கும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கவில்லை. அருந்த போதும் குறித்த பகுதியில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது. அதேவேளை சம்பவத்தில் புகையிரத தண்டவாளத்திற்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
தற்போது தடம்புரண்ட புகையிரத பெட்டகள் தண்டவாளத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளதுடன் தண்டவாளம் சீர்செய்யப்பட்டு, வடக்கிற்கான ரயில்சேவை மீண்டும் ஆரம்பித்துள்ளது.
இதேவேளை இந்த விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ரயில்வே திணைக்களம் மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.