நகைச்சுவை நடிகராக வலம் வருபவர்களுள் ஒருவர் யோகி பாபு. அவ்வப்போது ஹீரோவாகவும் படங்களில் நடித்து வருகிறார்.

யோகி பாபு ஹீரோவாக நடித்த தர்ம பிரபு உள்ளிட்ட ஒருசில படங்கள் வெற்றியும் பெற்றன.

இந்நிலையில் யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் காக்டெய்ல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

அதில் யோகி பாபு முருகனாக தோன்றியிருந்தார். அவருக்கு பின்னால் காக்டெய்ல் பறவை ஒன்றும் இருந்தது.

இந்தப் போஸ்டர் முருகக் கடவுளை இழிவுபடுத்தும் விதத்தில் அமைந்திருப்பதாகவும்,

எனவே இயக்குநர் மற்றும் நடிகர் யோகி பாபு மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும்

இந்து மக்கள் முன்னணியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்தனர்.

இந்தப் படத்தை இயக்குநர் பி.ஜி.முத்தையா தயாரிக்க விஜயமுருகன் இயக்குகிறார்.

மேலும் நடிகை அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here