உக்கிரேன் எல்லையில் ரஷ்யா தனது விசேட படையணிகளை நிறுத்தியுள்ளது ஒரு லாச்சத்துக்கும் அதிகமான துருப்புக்களை நிறுத்தி கடும் போர் பயற்சில் ஈடுபட்டு வருகின்றது.
உக்கிரேனும் தனது எல்லையில் இராணுவத்தை நிறுத்தியுள்ளது அத்தோடு தனது நாட்டுமக்களுக்கு ஆயுத பயிற்சிகளை உக்ரேன் வழங்கிவருகின்றது.
நேற்று அமெரிக்க நீர்முழ்கி கப்பலை ரஷ்யா நடுக்கடலில் வைத்து தடுத்து எச்சரித்து திருப்பி அனுப்பியுள்ளது.
உக்ரேனுக்கு அதிநவீன விமான எதிர்ப்பு ஏவுகணைகளை லிதுவேனியா ரகசியமாக வழங்கியுள்ளது.
இதே போன்று உக்ரேனுக்கு உதவும் வகையில் அண்டைநாடுகள் 1500 டன் ஆயுதம் தங்களை அனுப்பியுள்ளது,
அமெரிக்காவும் தனது இராணுவத்தையும் போர் தளபாடங்களை அனுப்பியுள்ளது இதனால் போர் பதட்டம் இன்னும் அதிகரித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ரஷ்யாவை எச்சரித்ததோடு இல்லாமல் ரஷ்யா போரை தொடுத்தால் அமெரிக்கா வேடிக்கை பார்க்காது என்றும் கூறியதோடு இன்னும் ஒரு விடயத்தை கூறியுள்ளார்.
ரஷ்யாவோடு போர் வந்தால் அது 3ம் உலகப்போர் ஆக மாறிவிடும் என்று கூறியிருந்தார்,
மறுபுறத்தில் ரஷ்யாவுடன் சில நாடுகள் பேர்ச்சுவார்தைகளில் ஈடுபட்டுவருகின்றது. சமாதானம் அல்லது 3ம் உலகப்போறா என்பதனை ரஷ்யாதான் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது.