சென்னை விமான நிலையத்தில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராஜீவ் காந்தி மரணம் பற்றி சீமான் தெரிவித்த கருத்து பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

பதில்:- அந்த பிரச்சனை குறித்து இந்த காலகட்டத்தில் சீமான் அந்த கருத்தை தவிர்த்து இருக்கலாம் என்பதே எங்களுடைய கருத்து.

கேள்வி:- எந்த தேர்தலாக இருந்தாலும் தொடர்ச்சியாக நாங்கள் தான் ஜெயித்து வருகிறோம் என்று மு.க.ஸ்டாலின் கூறி வருகிறாரே?

பதில்:- அவர் பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து சொல்கிறார். இப்போது நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் உள்பட எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

அன்றைக்கு இருந்த நிலைமை வேறு. இப்போது நிலைமை மாறி இருக்கிறது. மக்கள் முழுமையாக எங்கள் பக்கம் கவனத்தை திருப்பி இருக்கிறார்கள்.

கேள்வி:- உள்ளாட்சி தேர்தலுக்கு அ.தி.மு.க. தயாராகி விட்டதா?

பதில்:- உள்ளாட்சி தேர்தல் எப்போது நடந்தாலும் அதை சந்தித்து வெற்றி பெறுவதற்கான பணிகளில் அ.தி.மு.க. தயாராகவே இருக்கிறது.

கேள்வி:- அ.தி.மு.க. பொதுக்குழு எப்போது கூடும்?

பதில்:- அ.தி.மு.க. பொதுக்குழு நடக்க வேண்டிய நேரத்தில் நடக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here