சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படத்தை நேரடியாக ஆன்லைனில் ரிலீஸ் செய்வதால் திரையரங்க உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
இனி சூர்யா தயாரிக்கும் படங்கள் திரையரங்குகளுக்கு தேவையில்லை எனவும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக விஜய்யின் மாஸ்டர் படத்தையும் நேரடியாக ஆன்லைனில் வெளியிட முன்னணி OTT நிறுவனம் தீவிரமாக காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.