நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் நாட்டின் புதிய வெளியுறவுத்துறை மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி அமெரிக்கா சென்றுள்ளார்.PakistanForeignMinister க்கான பட முடிவு

மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் பிரசித்திபெற்ற அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு அவர் சமீபத்தில் பேட்டியளித்தார்.

இந்தியாவுடனான உறவுகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவு தொடர்பாக இந்த பேட்டியின்போது கருத்து தெரிவித்த ஷா மெஹ்மூத் குரேஷி ,

அமைதிக்கான வழியில் இந்தியா ஓரடி முன்னெடுத்து வைத்தால் பாகிஸ்தான் இரண்டடி எடுத்து வைக்க தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முன்னர் தெரிவித்திருந்ததை சுட்டிக் காட்டினார்.

நாங்கள் அமைதிக்கான முதலடியை எடுத்து வைத்தோம். இருநாடுகளுக்கும் இடையில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன.

இருநாடுகளுமே அணு ஆயுத வலிமைமிக்க நாடுகளாக இருக்கும் நிலையில் பிரச்சனைகளை போரினால் சரிசெய்ய முடியாது.

போர்முறை என்பது இதில் தீர்வாகாது. பேச்சுவார்த்தை மட்டும்தான் ஒரே தீர்வாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here