அமைதி குழுவினர் 27 பேரை கடத்திய தலிபான்.!

தலிபான் பயங்கரவாத குழுவிற்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடக்கும் மோதலை தடுக்கும் விதமாகவும்

பயங்கரவாத குழுக்களில் மக்கள் இணைவதை தடுக்கும் நோக்கிலும் பல்வேறு செயல்பாட்டாளர்கள் அமைதி குழு என செயல்பட்டு வருகின்றனர்.

இந்த செயல்பாட்டாளர்கள் ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டவும், அரசு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும்

இடையே தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கவும் பேரணி போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில் அந்நாட்டின் ஃபர்க் மாகாணத்தில் இருந்து 6 கார்கள் மூலம் 27 அமைதி செயல்பாட்டாளர்கள் ஹிரட் மாகாணம் நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் சென்ற வாகனங்களை இடைமறித்த தலிபான் பயங்கரவாதிகள்

அமைதி செயல்பாட்டாளர்கள் 27 பேரையும் கடத்தி சென்றனர். தலிபான் பயங்கரவாதிகள் கடத்தி சென்றவர்களின் நிலை என்ன என்பது இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here