முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்காக துப்புரவு பணிகளை செய்த உழவு இயந்திர சாரதி முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
வரும் 27ம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகளை முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலுமில்லத்தில் நடத்தும் வகையில் அண்மை நாட்களாக பிரதேச மக்கள் துப்பரவு பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று குறித்த பகுதிக்கு சென்ற இராணுவ புலனாய்வாளர்கள் மாவீரர் நாளை பெரிதாக செய்ய முடியாது என்ற வகையில் மக்களை அச்சுறுத்தியுள்ளதோடு ,துயிலுமில்லத்தில் ஏற்பாட்டு பணியோடு நின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளரிடம் தொலைபேசி இலக்கம் மற்றும் பெயர் என்பனவற்றினையும் பெற்று சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மாலை துப்பரவு பணிக்காக உளவு இயந்திரத்தை பாவித்த உளவு இயந்திர உரிமையாளரை இன்று முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு வருகை தருமாறு கூறிவிட்டு சென்றுள்ளனர்.