27 மொழிகளுக்கு மேல் நடைமுறையிலுள்ள இந்தியாவில், ஒரு மொழியில் தேசியக் கீதம் இசைக்கப்படும்போது,
இலங்கையில் மட்டும் இதற்கு எதிர்ப்பினை வெளியிடுவதன் நோக்கம் என்ன? என்று இராஜாங்க அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க கேள்வி எழுப்பினார்.
தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் எனக் கூறுவது முற்றுமுழுதாக பிரிவினையைத் தூண்டும் செயற்பாடு என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
“இவர்களின் தலைகளில் இன்னமும் பிரபாகரனின் சிந்தனைத்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.
வடக்கில் எமது உறவுகள், பிள்ளைகள் அனைவரும் கடந்த 30 வருடங்களாக பிரபாகரனுக்குக் கட்டுப்பட்டே வாழ்ந்து வந்தார்கள்.
பிள்ளைகளின் மனங்களில் எல்லாம் பிரபாகரன் இருந்து வருகிறார். என அவர் தெரிவித்தார்.
இந்தியாவில், பெங்காலி மொழியில் தேசிய கீதத்தை பாட முடியுமாக இருந்தால், ஏன் இங்கு மட்டும் ஒரு மொழியில் தேசிய கீதத்தை பாட முடியாது ? என அவர் தெரிவித்தார்.