தமிழீழ விடுதலைக்கு போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் உலகம் முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்களால் கொண்டாடப்பட்டது .
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது கடந்த 2009ஆம் ஆண்டு மே 17ம் தேதி பிரபாகரன் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
சரி பிரபாகரன் ஜாதகம் பற்றி ஜோதிடர்கள் சொல்வதை உங்களுக்கு கொடுத்திருக்கிறோம் படியுங்கள்.
பிரபாகரன் பிறந்த முகூர்த்தம் அபிஜித் முகூர்த்தம் 26-11-1954 நாளன்று கும்ப லக்னம், விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறார். சூரியனும் சந்திரனும் விருச்சிகத்தில் சேர்ந்திருந்தாலும் அவர் பிறந்தது பிரதமை திதி.
கார்த்திகை 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை. பிறக்கும் போது புதன் மகாதிசை 14 ஆண்டுகள் ஏழு மாதம் 13 நாட்கள் இருந்துள்ளது.
அவருக்கு 2002ஆம் ஆண்டு சந்திர தசை தொடங்கியது. சந்திரதசை 10 ஆண்டுகள்.
இந்த கால கட்டத்தில்தான் அதாவது 2008 மே 7 ஆம் தேதி முதல் 2009 ஆண்டு அக்டோபர் 7 வரை சந்திர தசை புதன் புத்தி நடந்த காலகட்டத்தில் போர் உக்கிரமடைந்தது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் அவர் கொல்லப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பிறந்த நட்சத்திரம் கேட்டை நட்சத்திரம் இது புத்திசாலித்தனமான புதனின் நட்சத்திரம். விருச்சிக ராசிக்கு உரிய அடையாளம் தேள்.
பொதுவாக தேள் எப்படி இறுதி வரை போராடுமோ அதேபோல் அந்த ராசிக்காரர்களுக்கும் அந்த குணம் உண்டு. பிற உயிரினத்துடனான சண்டையின் போது உடல் பாகங்களை இழந்தாலும் தேள் மீண்டும் மீண்டும் போரிடும்.
ஜீவராசிகளில் இதுபோன்ற உக்கிரத்தன்மையை தேளிடம் மட்டுமே அதிகம் பார்க்க முடியும். விருச்சிக ராசியை உடையவர்களுக்கும் இந்தத் தன்மை இருக்கும் என்பதால் தமிழீழத்திற்காக அவர் இறுதி வரை போராடினார்.
உச்சனை உச்சன் பார்த்தா – கெட்டுப்போன நேரத்துல பிச்சை கூட கிடைக்காதுங்கறது விதி.
அதுபோலத்தான் பிரபாகரன் ஜாதகத்தில் சனி உச்சம், உச்சமடைந்த சனி கடக ராசியில் உச்சமடைந்த குருவை பார்ப்பதால் உதவி எங்கேயும் கிடைக்காமல் போனது. லக்னத்தில் செவ்வாய் அமர்ந்திருக்கிறார்.
செவ்வாய் போர் குணம் கொண்டவர். இவர் சதா சர்வ காலமும் ஆயுதம் தாங்கியே வாழ்ந்தார்.
பிரபாகரனின் ஜாதகப்படி ஆயுள்காரகன் சனி உச்சம். லக்னாதிபதி சனி உயிர்காரகன் சனி உச்சம்.
ஆயுள் ஸ்தானாதிபதி புதன் பாக்ய ஸ்தானத்தில் சுக்கிரன், சனியுடன் சேர்க்கை பெற்றுள்ளார்.
இந்த ஜாதக அமைப்பின்படி எண்பது வயதுவரை பிரபாகரனுக்கு மரணம் கிடையாது!இந்த உண்மையான ஜாதகப்படி பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
பிரபாகரன் எண்பது வயதுவரை நீண்ட ஆயுளுடன் வாழ்வார். பிரபாகரன் ஜாதகம் உலகப் புகழ்பெற்ற மிகவும் விசேஷமான ஜாதகம்! பிரபாகரன் தன் லட்சியத்தைக் கண்டிப்பாக அடைந்தே தீருவார்.
தனித் தமிழீழம் என்ற உயர்ந்த லட்சியத்தைக் கண்டிப்பாக அடைவார் என்றும் கூறியுள்ளார். பிரபாகரன் 07-07-2012க்குமேல் தனித் தமிழீழத்தின் தளபதியாக பல வருடங்கள் ஆட்சி செய்து உலகப் புகழுடன் வாழ்வார்.
பிரபாகரன் ஜாதகப்படி 07-07-2012 முதல் அவருடைய ஆயுள்காலம் வரை தனித் தமிழீழத்தின் அதிபராக ஆட்சி செய்வார் என்றும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர். ஆனால் இந்த நாள்வரை அது நடக்கவில்லை.