ரஷ்யா உக்கிரேன் இடையிலான போர் உக்கிரம் அடைந்துள்ள நிலையில் உக்கிரேன் அதிபர் நாட்டுமக்களுக்கு ஒரு உத்தரவினை பிறப்பித்துஇருந்தார்.
அதாவது 16 வயது முதல் 60 ஆண்கள் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது அனைவரும் இணைந்து ரஷ்யாவுக்கு எதிராக போராடவேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார்.
போர்க்களத்தில் தன்னையும் இணைத்துக்கொண்டார். உக்கிரேன் ஜனாதிபதி கூறுகையில் நாம் தனித்து நின்று வல்லரசுடன் போராடிக்கொண்டு இருக்கிறோம்.
உதவி செய்வோம் என்று சொன்ன எந்த நாடுகளும் எமக்கு ஆதரவாக வரவில்லை எம்மை காப்பாற்ற என உருக்கமாக தெரிவித்திருந்தார்.
உக்கிரேன் நாட்டின் ஜனாதிபதி போர்களம் சென்று போராடுவது அந்த நாட்டு மக்களுக்கு மற்றும் இராணுவத்துக்கும் பெரும் மனஉறுதியையும் தந்துள்ளது.