வெளிநாட்டு தொழிற்சாலைகளை தேசிய மயமாக்குவோம் புடீன் மிரட்டல் உக்கிரேன் மீது ரஷ்யா 15 ஆவது நாளாக இராணுவநடவடிக்கைகளை செய்துவருகின்றது.
உக்கிரேனின் கடுமையான எதிர்த்தாக்குதல் காரணமாக ரஷ்யா படைகள் அழிக்கப்பட்டும், ரஷ்யா இராணுவவீரர்கள் உக்கிரேறன் இராணுவத்திடம் பலர் சரணடைந்தும் உள்ளனர்.
உக்கிரேன் மீதான யுத்தத்தை ரஷ்யா நிறுத்தவேண்டும் என்று பல நாடுகள் வலியுறுத்தியும் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தும் வருகின்றனர்.
இதன் விளைவாக புடீன் கடுமையாக உலகநாடுகளை எச்சரித்துள்ளார்.
அதாவது ரஷ்யாவாவில் இயங்கிவந்த வாகன உற்பத்தி நிறுவனங்களான BMW ,டொயட்டா, போன்ற முன்னணி நிறுவனங்கள் தமது உற்பத்திகளையும், ஏற்றுமதிகளையும் நிறுத்தியுள்ளன.
இதனால் ஆத்திரம் அடைந்த ரஷ்யா அதிபர் புடீன் அணைத்து நிறுவனங்களும் உடனடியாக இயங்கவேண்டும் என்றும் இல்லாவிடில் அனைத்து நிறுவனமும் அரச உடைமையாக்கப்படும் என எச்சரித்துள்ளார்.