அடையாறு நதி கடலில் கலக்கும் சென்னை பட்டினப்பாக்கம் முகத்துவாரத்தில் கடந்த 29-ம் தேதிலிருந்து தொடர்ந்து
ஆறு நாட்களாக நுரை பொங்கி வழிந்தது. பட்டினப்பாக்கம்.முதல் திருவான்மியூர் கடற்கரை வரை இந்த நுரை காணப்பட்டது.
இதனையடுத்து கடந்த நவம்பர் 29 மற்றும் டிசம்பர் 3 ஆகிய தேதிகளில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆறு
கடலில் கலக்கும் இடத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் கடல் நீர் மாதிரியையும், 1கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடல் நீர் மாதிரியையும் சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தினர்.
ஆய்வு முடிகளில் கடல்நீரில் நச்சு ஏற்படுத்தக் கூடிய பாஸ்பேட், அம்மோனியா, நைட்ரேட், TDS, எண்ணெய், க்ரீஸ் , போன்றவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபோன்ற ரசாயனங்கள் கடல் நீரில் கண்டறியப்பட்டதற்கு சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் ஆற்றில் விடப்பட்டதே காரணம் என்று மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆற்றை ஒட்டி இருக்கக்கூடிய அனைத்து தொழிற்சாலைகளையும் தீவிரமாக
கண்காணித்து வருவதாகவும் மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை கடற்கரையில் பொங்கி வழியும் நுரை மக்கள் மத்தியில் அதிர்ச்சி கலந்த பயத்தை ஏற்படுத்தியுள்ளது.