இயக்குநர் சிவா இயக்கத்தில் தனது 168-வது படத்தில் நடித்து வருகிறார்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தில் ரஜினிகாந்த் உடன் நடிகர் சூரி,
கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சதீஷ், விஸ்வாந்த் உள்ளிட்டோரும் இணைந்துள்ளனர்.
இமான் இசையில் உருவான பாடலுடன் படப்பிடிப்பை தொடங்கியுள்ளது படக்குழு.
ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வரும்
நிலையில் கீர்த்தி சுரேஷின் கேரக்டர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி ரஜினிகாந்தின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியானதால் சில விமர்சனங்கள் எழுந்தன.
ஆனால் அடுத்தடுத்து வெளியான அறிவிப்புகள் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தன.
இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.