ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான மைத்திரிபால சிறிசேனவின் எதிர்ப்பையும் மீறி- ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையணியில் கடமையாற்றி வரும் லெப். கேணல் கலன அமுனுபுரவை மீள அழைப்பதற்கு இராணுவம் தீர்மானித்துள்ளது.
இறுதியாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதும் லெப். கேணல் கலன அமுனுபுர, போர் குற்றச்செயல் குற்றச்சாட்டின் அடிப்படையில் நாட்டுக்கு மீள அழைப்பது குறித்து ஜனாதிபதி அதிருப்தி வெளியிட்டார் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
லெப். கேணல் அமுனுபுர மாலி நாட்டில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்.
ஜனாதிபதியின் எதிர்ப்பையும் மீறி இராணுவத்தினர் குறித்த படையதிகாரியை மீள அழைப்பதற்கு திட்டமிட்டுள்ளனர்.
போர் குற்றச்செயல்களின் அடிப்படையில் படையதிகாரி ஒருவரை மீள நாட்டுக்கு அழைத்து கொள்ளுமாறு இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையணி கோரிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்புப் படையணி ஒரு படைவீரரை மீள அழைத்துக் கொள்ளுமாறு உத்தரவிடும் போது இலங்கை இராணுவத்தினர் அதனை எதிர்ப்பதற்கான சாத்தியங்கள் குறைவு என பாதுகாப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.