பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்கின்றார்
. இன்றும் நாளையும் அங்கு தங்கியிருக்கும் பிரதமர் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளார்.
நாளை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையதிறப்பு விழாவிலும் பிரதமர் பங்கேற்கவுள்ளார்.
இன்றைய தினம் வடமாகாண அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெறும் பல்வேறு அபிவிருத்தி திட்ட ஆரம்ப நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.
இன்றும் நாளையும் பிற்பகலில் ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகளிலும் பிரதமர் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனைவிட ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்க்கட்சிகளின் ஆதரவைப் பெறுவது தொடர்பில் கட்சிகளின் தலைவர்களுடனும் அவர் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.