இலங்கையில் முன்கூட்டிய தேர்தல் ஒன்று இடம்பெறுவதற்கான சாதியம் இல்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.ranil க்கான பட முடிவு

உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள வியட்நாம் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மாநாட்டின் இடைநடுவில் சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதில் அவர் மேலும் குறிப்பிடுகையில் .

இலங்கை உட்பட ஆசிய நாடுகள் நிதிப் பற்றாக்குறையுடனேயே செயற்படுகின்றன. இது ஒரு கரிசனைமிக்க விடயமாகும். எனினும் இது நிதியை பெறும் இயலுமையை பாதிக்கவில்லை.

சீனாவினால் இலங்கை கடன் பொறிக்குள் சிக்கியுள்ளதாக கூறப்படுவதை நான் நம்பவில்லை. நாங்கள் சீனாவுடன் செயற்பட்டு வருகின்றோம். சீனாவின் முதலீடுகள் இலங்கையில் இடம்பெறுகின்றன.

சீனாவிடம் கடன்கள் பெறப்படுகின்றன. அதனை நாங்கள் அச்சுறுத்தலாக பார்க்கவில்லை என்றார்.

இதேவேளை முன்கூட்டிய தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர்,

அவ்வாறு முன்கூட்டிய தேர்தல் ஒன்று இடம்பெறும் சாதியமில்லை என தெரிவித்துள்ளார்.

நாங்கள் பாதகமான பொருளாதாரத்தை பொறுப்பெடுத்து முன்னேற்றி வருகின்றோம். தற்போது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியுள்ளோம். என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here