அமெரிக்கா ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில், ஈரான் ராணுவத்தளபதி சுலைமானி உயிரிழந்தார்.

இதையடுத்து இருநாடுகள் இடையே போர்பதற்றம் அதிகரித்தது. சுலைமானியின் இறுதிச்சடங்கு நிகழ்ந்த சில மணிநேரத்தில்,

ஈராக்கில் அமெரிக்க துருப்புகள் செயல்பட்டு வந்த ராணுவத்தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு கருதி, ஈரான் உடன் எந்த முன் நிபந்தனையும் இன்றி பேச்சுவார்த்தைக்கு தயாராக

இருப்பதாக ஐக்கிய நாடுகள் அவைக்கான அமெரிக்க தூதர் கெல்லி கிராஃப்ட் தெரிவித்துள்ளார். எந்த நாடும் தற்காப்புக்கான நடவடிக்கை எடுக்க ஐ.நா.சாசனத்தின்

51வது பிரிவு வகை செய்வதாகவும், அந்த அடிப்படையில் தற்காப்புக்காகவே சுலைமானியை கொன்றதாகவும் ஐக்கிய நாடுகள் சபைக்கு எழுதிய கடிதத்தில் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

போரையோ, நிலைமை மேலும் மோசமடைவதையோ தங்கள் தரப்பு விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here