தமிழர்கள் வெளிநாடுகளை நம்பி இருக்காமல் எமது தேசத்தில் உள்ள
வளங்களை பயன்படுத்தி இன்றய பொருளாதார நிலைமைகளுக்கு நாம்
தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி நகரவேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர்
கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்
லண்டனில் உள்ள பத்திரிகை இலங்கை பற்றிய ஒரு ஆய்வுக்கட்டுறை ஒன்றை பிரசுப்பித்துள்ளது.
இலங்கையின் டொலர் கையிருப்பு குறைந்து கொண்டு செல்வதனால்
நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய அபாயகரமாக மாறி உள்ளது என சுட்டிகாட்டி உள்ளதோடு இலங்கை இந்த வருடத்தில்
திவால் ஆகும் என எச்சரித்துள்ளது. அதேபோல் இலங்கையின் அரிசி உற்பத்தியாளர் சங்கம் கூறியது போன்று
வருகின்ற ஏப்பிரல் மாதத்தில் அரிசி விலை ரூபா 300 தாண்டும் என்று கூறியதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.