ரஷ்யா கிழக்கு உக்கிரேனுக்கு படைகளை அனுப்பியதை அடுத்து ரஷ்யா 5 வங்கிகள் மீதும்
3 தொழில் அதிபர்களின் சொத்துக்கள் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்தின் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
ஜெனடி டிம்சென்கோ போரிஸ் ரோட்டன்பெர்க் மற்றும் இகோர் ரோட்டன்பெர்க் ஆகிய மூன்று பேரின் சொத்துக்கள் முடக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள தோடு இங்கிலாந்துக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உக்கிரேனின் கிழக்கு எல்லையில் ரஷ்யா தனது படைகளை அனுப்பியது படை எடுப்புக்கு சமன் என்று இங்கிலாந்தின் பிரதமர் தெரிவித்துள்ளார்.