இலங்கை வரும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்!

எதிர்வரும் ஜனவரி மாதம் 14,15 ஆம் திகதிகளில் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக

அந் நாட்டு வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மரியா ஸகரோவா தெரிவித்துள்ளார்.

இந்த விஜயத்தின்போது அவர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்

மற்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளார்.

இதன்போது ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான தற்போதைய உறவுகள், அரசியல் உரையாடலை ஊக்குவிப்பதற்கான வாய்ப்புகள்,

வர்த்தக-பொருளாதார குறித்து கவனம் செலுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here