சசிகலா மற்றும் இளவரசி ஆகியோரை சிறையின் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய கர்நாடக அரசுக்கு சிறைத்துறை நிர்வாகம் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சசிகலா மற்றும் இளவரசி அளவுக்கு மீறி சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு துஷ்பிரயோகம் செய்தவர்கள். ஆகையால் இவர்களை நன்னடத்தை அடிப்படையில் வெளியே விடக்கூடாது.
மேலும் சம்மந்தப்பட்ட சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவ், சிறைத்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் மற்றும் துணை கண்காணிப்பாளர் அனிதா ஆகியோர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.