3 ஆண்டு சிறை தண்டனையை நிறைவு செய்துள்ள அவருக்கு இன்னும் ஒராண்டு தண்டனை மீதம் உள்ளது.

அவர் விரைவில் பரோலில் வெளிவர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சசிகலா கடந்த 3 ஆண்டுகளில் கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த போது 10 நாட்கள் பரோலில் வந்தார்.

அவர் உயிரிழந்த போது சசிகலா 15 நாட்கள் பரோலில் வந்தார். ஆனால் 9-வது நாளிலேயே சிறைக்கு திரும்பி விட்டார்.

இந்நிலையில் சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெய ஆனந்த்துக்கும்,

சசிகலாவின் அக்காள் வனிதாமணியின் பேத்திக்கும் (பாஸ்கரனின் மகள்) மார்ச் 5-ந் தேதி மன்னார்குடியை அடுத்த சுந்தரக்கோட்டையில் திருமணம் நடைபெற உள்ளது.

இந்த திருமணத்தில் சசிகலா கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என இரு குடும்பத்தினரும் விரும்புகின்றனர்.

இதனால் அவரை பரோலில் வெளியே அழைத்து வர முடிவு செய்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here