பாலிவுட் சீரியல் நடித்து புகழ்பெற்ற நடிகை சேஜால் சர்மா, நேற்று தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனிப்பட்ட சில பிரச்னைகளால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளன.
30 வயதான அவர் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்தாவர். விளம்பரம் மற்றும் வெப் சீரியசிலும் அவர் நடித்துள்ளார்.
அவர் நடித்த டில் தோஹ் ஹேப்பி ஹாய் ஜி என்ற சீரியல் பாலிவுட்டில் மிகவும் பிரபலமானதாகும்.