மகாராஷ்டிரா ஆரம்ப காலம் முதல் காங்கிரசின் கோட்டையாக இருந்து வந்தது.

காங்கிரசை வீழ்த்துவதற்காக இந்துத்வாவை தீவிர கொள்கையாக கொண்ட சிவசேனாவும், பாரதீய ஜனதாவும் 1989-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது கைகோர்த்தன.

இரண்டு கட்சிகளும் 1995-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலையும் சேர்ந்தே சந்தித்தன.

அந்த தேர்தலில் முதல் முறையாக சிவசேனா தலைமையிலான அந்த கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

மனோகர் ஜோஷியும், பின்னர் நாராயண் ரானேயும் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்கள்.
பாரதீய ஜனதாவுக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டது. இந்த ஆட்சி 1999-ம் ஆண்டு வரை 5 ஆண்டு காலத்தை பூர்த்தி செய்தது.

இதையடுத்து நடந்த தேர்தலில் தோல்வியை தழுவிய இந்த கூட்டணி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது, தொகுதி பங்கீடு பிரச்சினை காரணமாக பாரதீய ஜனதாவுடனான 25 ஆண்டுகால கூட்டணியை சிவசேனா முறித்தது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலை இரண்டு கட்சிகளும் சேர்ந்தே சந்தித்த நிலையில், முதல்-மந்திரி பதவி விஷயத்தில் ஏற்பட்ட மோதலின் பலனாக 20 ஆண்டுகளுக்கு பிறகு சிவசேனா தலைமையில் மீண்டும் ஆட்சி மலருகிறது.

இந்த முறை சிவசேனா கொள்கையில் முரண்பட்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கைகோர்த்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here