ஆசிய கோப்பை போட்டியின் தொடக்கத்திலேயே வெளியேறியது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிப்பதாக இலங்கை அணி கேப்டன் மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியா உள்பட 6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய், அபுதாபியில் நடைபெற்று வருகிறது.
அபுதாபியில் நேற்று நடந்த 3-வது ‘லீக்’ ஆட்டத்தில் இலங்கை அணி 91 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானிடம் தோற்று போட்டியில் இருந்து வெளியேறியது.
முதல் ஆட்டத்தில் 150 ரன்னுக்கு குறைவாக எடுத்தோம். இந்த ஆட்டத்தில் 158 ரன் வரை தான் எடுத்தோம்.
ஆப்கானிஸ்தான் மிகவும் அபாரமாக விளையாடி எங்களை வெளியேற்றி விட்டது. அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்களது தொடக்கம் சிறப்பாக இருந்தது. ஆனால் மிடில் ஆர்டர் வரிசை மீண்டும் சொதப்பி விட்டது. பந்துவீச்சு சிறப்பாக இருந்தது.
பீல்டிங்கிலும் முன்னேற்றம் இருந்தது. ஆனால் பேட்டிங் தான் மிகவும் மோசமாக இருந்தது.
எங்கள் அணி வீரர்களுக்கு நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்பது தெரியவில்லை. இரண்டு ஆட்டத்திலும் 160 ரன் கூட எடுக்க முடியாமல் போனது வருத்தத்தை ஏற்படுத்தியது என இவ்வாறு அவர் கூறினார்.