வடகொரியாவானது தனது ஏவுகணை பரிசோதனைகளை மீண்டும் இயக்கி வருகின்றது.
இதற்கு அமெரிக்கா ,தென்கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.
அத்தோடு அமெரிக்காவுக்கும் , வடகொரியாவுக்குமிடையில் இடம்பெறவிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து
ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையிலேயே இந்த ஏவுகணைப் பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றது.
இதேவேளை ஐக்கிய நாடுகளின் சபையின் ஆதரவுடன் வட கொரியாவுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது.
இதனால் வடகொரியா- அமெரிக்காவுக்கு இடையே போர் சூழ்நிலை நிலவியது.
இந்நிலையிலேயெ வடகொரியா ஒப்பந்தத்தை மீறி மீண்டும் ஏவுகணை சோதனையை தொடர்ந்து நடத்தி வருகிறது.
அத்தோடு மூடியிருந்த ஏவுகணை தொழிற்சாலையை செயற்பாட்டிற்கு
கொண்டுவந்துள்ளமை அமெரிக்காவுக்கு அளிக்கும் கிறிஸ்துமஸ் பரிசு என வடகொரியா எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.