வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவித்து பட வேலைகளை தொடங்கினர்.
ஆனால் அந்த படம் திடீரென்று கைவிடப்பட்டது.
குறிப்பிட்ட தேதியில் சிம்பு நடிக்க வராமல் தாமதம் செய்ததால் படத்தை நிறுத்தியதாக கூறப்பட்டது.
பின்னர் படப்பிடிப்புக்கு உரிய நேரத்தில் வரவேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் படத்தை முடிக்க வேண்டும்
என்பன உள்ளிட்ட உறுதிமொழி ஒப்பந்தத்தில் சிம்பு கையெழுத்திட்டால் படப்பிடிப்பை தொடங்க தயார் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறினார்.
அவரது கோரிக்கையை ஏற்று சிம்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதால்,
மாநாடு படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.