நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைக்கு காரணமான, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத செயற்பாட்டை கண்டித்தும் கொழும்பு விகாரமகா தேவி பூங்கா முன்றலில் தொடர் சத்தியாகிரக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 4 மணியளவில் இந்தப் போராட்டம் தம்பர அமில தேரரின் உரையுடன் ஆரம்பமானது.

பௌத்த மத துறவிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வியாபாரிகள், சமூக ஆர்வலர்கள் போன்றோர் கலந்து கொண்டுள்ளனர்.

இச் சத்தியாகிரக போராட்டத்தை சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற் சங்கங்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இப் போராட்டத்தில் ஜனாதிபதிக்கு எதிராக கையெழுத்து வேட்டையும் நடாத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here