ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று நண்பகல் அவசர அமைச்சரவை கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வாராந்த அமைச்சரை கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றிருந்ததுடன் அடுத்த வாரத்திற்கான அமைச்சரவை தீர்மானங்களும் எடுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் இன்று அவசர அமைச்சரை கூட்டத்துக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இதனால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க,அமைச்சர்கள் மலிக் சமரவிக்ரம, துமிந்த திஸாநாயக்க, கயந்த கருணாதிலக, ரவூப் ஹக்கீம், நிமல் சிறிபால டி சில்வா மற்றும் சாகல ரத்னாயக்க ஆகியோர் நாட்டில் இல்லாத நிலையில் இந்த அவசர அமைச்சரவை கூட்டம் கூடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.