இந்தியாவில் நடைபெறும் பயிற்சி நெறிக்குச் செல்லும் வட மாகாணசபை உறுப்பினர்களின் குழுவில் உள்ளடக்கப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு வீசா மறுக்கப்பட்டுள்ளது. ஆசியா பவுண்டேசன் நிறுவனத்தால் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு இந்தியாவில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது.
மாகாண சபை உறுப்பினர்கள் இரண்டு கட்டமாக இந்தியாவுக்கு அழைக்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய உறுப்பினர்கள் இந்தியாவின் ஹைதராபாத் நகருக்கு இன்று புறப்படவுள்ளனர். இந்தக் குழுவில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் பெயரும் உள்ளடக்கப்பட்டிருந்தது. எனினும், அவருக்கான வீசா இந்தியத் தூதரகத்தால் மறுக்கப்பட்டுள்ளது.