இரும்புத்திரை’ இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வந்த ’ஹீரோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் பின்னணி இசை, டப்பிங் உள்பட தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படம் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கிறிஸ்துமஸ் விடுமுறையில் இந்த படத்தை வெளியிட ஏற்கனவே படக்குழு திட்டமிட்டு இருந்ததாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் சற்று முன்னர் தனது டுவிட்டர் இணையதளத்தில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் காலை 11 30 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here