அமெரிக்கா துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழப்பு.

அமெரிக்காவின் நியூஜெர்சியில் இருவேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியாகினர்.

சூப்பர் மார்க்கெட் உள்பட 2 இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்திய 2 பேரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

நியூஜெர்சி நகரின் செமின்ட்ரி பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் அதிகாரி ஒருவர் பலியானார்.

அதே பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியானதாக நியூஜெர்சி நகர போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என கூறப்படுவதால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here